Connect with us

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை ரசிகர்கள்..!!

Cinema News

கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய சின்னத்திரை ரசிகர்கள்..!!

2023 ஆம் ஆண்டில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நமக்கு பிடித்த பல நடிகர்களை இழந்துவிட்டோம். அதிலும் குறிப்பாக நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் மறைவு கோடான கோடி ரசிகர்கள் மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகர் அன்பழகன் மரணமடைந்துள்ளார். இவர் கனா காணும் காலங்கள் சீரியல் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

இளசுகள் பலர் நடித்திருந்த அந்த தொடரில் PT வாத்தியாராக நடித்திருந்த அன்பழகன் தனது இயல்பான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்திருந்தார் . இதை தொடர்ந்து ரெட்டை வால் குருவி, தாயுமானவன் , ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா மற்றும் சீதா ராமன் போன்ற பல சின்னத்திரை தொடர்களில் அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவரது மறைவு செய்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இதையடுத்து ரசிகர்களும், திரையுலகினரும் அன்பழகனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நவம்பர் 6-ல் தேர்தல் சின்னம் கேட்டு டெல்லி செல்கிறார் விஜய்! எந்த சின்னத்தில் களம்?

More in Cinema News

To Top