Connect with us

“வெளியானது ஃபஹத் பாசில் நடிக்கும் ‘ஆவேஷம்’ படத்தின் First Look!”

Cinema News

“வெளியானது ஃபஹத் பாசில் நடிக்கும் ‘ஆவேஷம்’ படத்தின் First Look!”

கடைசியாக ஃபஹத் ஃபாசிலை ‘ரத்னவேலு’ கதாபாத்திரத்தில் ‘மாமன்னன்’ படத்தில் பார்த்தோம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என உள்ளூர் அரசியல்வாதியாக அட்டகாசம் செய்திருந்தார். இதையடுத்து, இதற்கு அப்படியே நேர்மாறான லுக் ஒன்று அண்மையில் ஃபஹத் ஃபேன்ஸால் கொண்டாடப்பட்டது.

கருப்பு சட்டையில் கிருதாவுடன் ரவுடி கெட்டப்பில் இருக்கும் லுக் தான் அது. மலையாளத்தில் அண்மையில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இந்தப் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன், அடுத்ததாக இயக்கும் படம் ‘ஆவேஷம்’ (Aavesham).

இந்தப் படத்தில் நடிக்கும் ஃபஹத்தின் லுக்குதான் அண்மையில் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் நஸ்ரியா நசீம், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சுஷின் ஷ்யாம் இசையமைக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு பெரும் கூட்டம் ஃபஹத் பாசிலை தூக்கி கொண்டாடும் வகையில் அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. படம் ஏப்ரல் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬✨ கென் கருணாஸ் இயக்குநராக அவதாரம் – முதல் படப்பிடிப்பு முடிவு!

More in Cinema News

To Top