Connect with us

‘துரந்தர் – பார்ட் 1’ மாபெரும் வெற்றி… பார்ட் 2 மீது உயர்ந்த எதிர்பார்ப்பு

Cinema News

‘துரந்தர் – பார்ட் 1’ மாபெரும் வெற்றி… பார்ட் 2 மீது உயர்ந்த எதிர்பார்ப்பு

ரூ.250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘துரந்தர் – பார்ட் 1’ திரைப்படம், 2025-ம் ஆண்டு வெளியான படங்களிலேயே வசூல் ரீதியாக அனைவரையும் பின்னுக்கு தள்ளி நம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற சாதனையை படைத்துள்ளது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம், வெளியான முதல் வாரத்திலிருந்தே திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பாலிவுட் சினிமாவில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது.

மாதவன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் ஆகியோரின் வலுவான நடிப்பும், பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகளும், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, வரும் மார்ச் மாதத்தில் வெளியாகவுள்ள ‘துரந்தர் – பார்ட் 2’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற கேள்வி தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மிதமான ஓபனிங்குடன் ‘Lock Down’ – இன்றைய தியேட்டர் வசூல் நிலவரம்

More in Cinema News

To Top