Connect with us

‘திரௌபதி 2’ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் – எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வசூல்

Cinema News

‘திரௌபதி 2’ பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் – எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத வசூல்

2020ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய ‘திரௌபதி’ படத்தின் தொடர்ச்சியாக அண்மையில் திரையரங்குகளில் வெளியான ‘திரௌபதி 2’ படம், ஆரம்பத்தில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்த இந்த படம், வரலாற்று கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம், திரையரங்குகளில் வெளியான பின் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது. முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் படம் தடுமாறி வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விமர்சனங்களும் கலவையானதாகவே இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, ‘திரௌபதி 2’ படம் வெளியான 8 நாட்களில் உலகளவில் ரூ.2 முதல் 3 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் வசூல் உயருமா அல்லது இதே நிலை தொடருமா என்பதே தற்போது சினிமா வர்த்தக வட்டாரங்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. ரசிகர்களும் படத்தின் அடுத்தடுத்த நாட்களின் வசூல் நிலவரத்தை கவனமாக எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாஸ் அப்டேட்! ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் ஃபர்ஸ்ட் லுக் 🔥

More in Cinema News

To Top