Connect with us

விடுதலை 2 படத்திற்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

விடுதலை 2 படத்திற்காக மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

வெற்றிமாறனின் விடுதலை 2 திரைப்படம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தில் நடிக்க நடிகை மஞ்சு வாரியர் வாங்கிய சம்பளம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறனின் திறமை மிகு படைப்புகளில் ஒன்றான விடுதலை திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்றது .

சூரி , விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான இப்படம் அனைவர்க்கும் தனி அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதற்கெல்லாம் மேல் சூரி என்ற நகைச்சுவை நடிகரை கதையின் நாயகனாக மாற்றி பட்டை சீவி நமக்கு இப்படம் கொடுத்துள்ளது .

இப்படம் கொடுத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது .

இதன் இரண்டாம் பாகத்தில் சூரி , விஜய்சேதுபதி , மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்க இசைஞானியின் இசை படத்தை மேலும் மெழுகேற்றியுள்ளது .

இந்நிலையில், விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர், இப்படத்திற்காக ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது . இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாடகர் ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகம்

More in Cinema News

To Top