Connect with us

“வாடிவாசல் படம் குறித்த Latest Update! இயக்குனர் வெற்றிமாறன், அமீர் திடீர் சந்திப்பு! இதுதான் பின்னணியா?!”

Cinema News

“வாடிவாசல் படம் குறித்த Latest Update! இயக்குனர் வெற்றிமாறன், அமீர் திடீர் சந்திப்பு! இதுதான் பின்னணியா?!”

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் மத்தியில் ’பருத்திவீரன்’ பிரச்சனை கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக ஓடி வருகிறது.

சமுத்திரக்கனி, சசிகுமார், பொன்வண்ணன் உள்ளிட்டோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நிலையில் இதுவரை யாரும் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இயக்குனர் அமீரை இயக்குனர் வெற்றிமாறன் திடீரென சந்தித்துள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் இந்த சந்திப்பு ’பருத்திவீரன்’ பிரச்சனை குறித்து அல்ல என்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தில் அமீர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ள நிலையில் அந்த கேரக்டரை மெருகேற்றுவது குறித்து இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

’வாடிவாசல்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு அடுத்தபடியாக அமீர் கேரக்டர் தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அந்த கேரக்டருக்கு அமீரை தவிர வேறு யாரும் செட் ஆக மாட்டார்கள் என்றும் வெற்றிமாறன் தரப்பினர் கூறியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top