Connect with us

“அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா, ‘பாகுபலி 2’ படத்தின் இடைவேளை காட்சி போல தெரிகிறது! இயக்குனர் மோகன் ஜி Tweet!”

Cinema News

“அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா, ‘பாகுபலி 2’ படத்தின் இடைவேளை காட்சி போல தெரிகிறது! இயக்குனர் மோகன் ஜி Tweet!”

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை அடுத்து ராமர் கோவில் திறப்பு விழா என்பது ’பாகுபலி 2’ இடைவேளை காட்சி போல் பிரமாண்டமாக உள்ளது என தமிழ் இயக்குனர் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அயோத்தியில் இன்று ராமர் கோவில் திறக்கப்பட உள்ளதை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது மகன், அமிதாபச்சன், அக்ஷய்குமார், கங்கனா ரனாவத், உள்ளிட்ட பலர் அயோத்தி சென்றுள்ளனர்.

மேலும் நாடு முழுவதிலும் இருந்து பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் அயோத்திக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்களும் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலங்கள் ஆகும்.

இந்தநிலையில் ’திரௌபதி’ உள்பட ஒரு சில படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி தனது சமூக வலைத்தளத்தில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்து கூறியிருப்பதாவது, “வரலாற்றை மாற்றி எழுதும் முக்கியமான நாள் இன்று. மன்னர்கள் காலத்தில் ஒரு கோவிலை எப்படி அமைத்திருப்பார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது. ஆதரவும், எதிர்ப்பும், பக்தியும் குரோதமும் கலவையாக பார்க்க முடிகிறது.. பாகுபலி இரண்டாம் பாகத்தின் இடைவேளை காட்சி நினைவுக்கு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Jailer 2 Update 💥 Shah Rukh Khan இல்லைனா? Big Twist!”

More in Cinema News

To Top