Connect with us

தனுஷின் வெற்றிப் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஓடிடி வெளியீடு – ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

Cinema News

தனுஷின் வெற்றிப் படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’ ஓடிடி வெளியீடு – ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

நடிகர் தனுஷ் நடித்துள்ள வெற்றிப் படமான தேரே இஷ்க் மெய்ன் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவான இந்த காதல்–உணர்ச்சி திரைப்படம், திரையரங்குகளில் வெளியானபோது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்றது. குறிப்பாக, கதையின் நுணுக்கமான உணர்வுகளை வெளிப்படுத்திய தனுஷின் நடிப்பு, காதலின் வலி மற்றும் ஆழத்தை பிரதிபலித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இப்படத்தின் இசையும் பாடல்களும் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வந்தன. திரையரங்குகளில் வசூல் ரீதியாகவும் வெற்றியை பதிவு செய்த இந்த படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதால், மேலும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இப்படம் வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதல் Netflix ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள தனுஷ் ரசிகர்கள் ஒரே நேரத்தில் இந்த படத்தை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், திரையரங்கில் காண தவறியவர்களுக்கும், மீண்டும் உணர்ச்சிப் பயணத்தை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் இந்த ஓடிடி வெளியீடு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால், வெளியீட்டு நாளை முன்னிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ₹24 கோடி வசூலைத் தாண்டிய ‘TTT’ – திரையரங்குகளில் வெற்றி பயணம்

More in Cinema News

To Top