Connect with us

ஆக்சன் கில்லர் ஆக அவதாரம் எடுக்கும் தனுஷ், D54 படத்தின் அப்டேட்

dhanush-gv-prakash

Cinema News

ஆக்சன் கில்லர் ஆக அவதாரம் எடுக்கும் தனுஷ், D54 படத்தின் அப்டேட்

Dhanush Next movie: தனுஷ் பொருத்தவரை நடிப்பில் அசுரனாகவும், படம் எடுப்பதில் திறமைசாலியாகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் வாத்தி போன்ற படங்களின் மூலம் வெற்றிப் பெற்ற தனுஷ், இயக்குனராகவும் தற்போது இட்லி கடை படத்தின் மூலம் அடுத்த வெற்றியை அடைந்து விட்டார். அதாவது எந்த மாதிரியான படத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்த்து பாராட்டுவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி பீல் குட் மூவியாக படம் எடுத்து வருகிறார் இயக்குனரான தனுஷ்.

நடிக்கும் படங்கள் வன்முறையாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் எடுக்கக்கூடிய படங்கள் அப்படி இருக்கக் கூடாது என்று முன் உதாரணமாக தனுஷ், படத்தை இயக்கிக் கொண்டு வருகிறார். அதனால் தான் சமீபத்தில் வெளிவந்த இட்லி கடை படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெற்றி பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் அடுத்து நடிக்கும் படம் D54.

இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். போர் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. D54 பற்றிய teaser மற்றும் first look photos, Instagram மற்றும் Twitter போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனுஷை ஆக்சன் ஹீரோவாக பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படம் போராட்ட நிறைந்த காட்சிகள் என்பதால் நிச்சயம் blockbuster ஆகும்.

D54, தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலே தூக்கி, box office கொண்டு வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. D54 படத்தின் பூஜை ஜூலை 10, 2025 அன்று நடந்தது. படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டது. நடிகர் மற்றும் படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்கள், ரசிகர்களை அதிக உற்சாகத்தில் வைத்துள்ளது.

மேலும் இப்படத்தில் தனுஷ் உடன் நடிகை மமிதா பைஜூ இணைந்திருக்கிறார். வழக்கம்போல் தனுஷ் படம் என்றாலே ஹிட் கொடுப்பதற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் தயாராகி விட்டார். இப்படம் அடுத்த வருஷம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாளை ரிலீஸ் ஆகப்போகும் மாரி செல்வராஜின் பைசன், இன்று கேட்ட மன்னிப்பின் ரகசியம்

More in Cinema News

To Top