Connect with us

“மகள் இனியாவின் தேர்வு எனக்கு ஆச்சரியம்!” – தேவயானி நேர்காணல்

Cinema News

“மகள் இனியாவின் தேர்வு எனக்கு ஆச்சரியம்!” – தேவயானி நேர்காணல்

தமிழ் திரைப்பட உலகில் ஒருகாலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய தேவயானி, தனது மகள் இனியாவைப் பற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.1993ல் பெங்காலி திரைப்படமான ஷாத் பஞ்சோமி மூலம் அறிமுகமான தேவயானி, 1995ல் தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் தமிழில் கால்பதித்தார்.

அடுத்ததாக அஜித்துடன் நடித்த காதல் கோட்டை அவருக்கு பெரும் பிரபலத்தை கொண்டு வந்தது. பின்னர் பூமணி, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, மூவேந்தர், சமஸ்தானம், ஒருவன், தென்காசிப்பட்டணம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே தனித்த இடத்தை பிடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமில்லை, ஹிந்தி மற்றும் வங்காள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது கலைத்துறைக் காலத்தின் உச்சத்தில் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

தேவயானியின் மூத்த மகள் இனியா, ஜீ தமிழின் ‘சரிகமபா சீசன் 5’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாலும் இறுதி சுற்றை எட்டவில்லை. சமீபத்திய பேட்டியில் மகளைப் பற்றிக் கூறிய தேவயானி, “என் பெரிய மகள் நல்லா படிப்பாதான். அவளுக்கு அதிக புத்திசாலித்தனமும் இருக்கிறது. அப்படியிருக்க, நான் அவள் டாக்டர் படிப்பாள் என நினைத்தேன்.

ஆனால் அவள் தன்னுடைய விருப்பத்தைத் தெளிவாகச் சொல்லிட்டா—‘நான் விஸ்காம் படிக்கணும்’ன்னு. நான் அவளை எதற்கும் வற்புறுத்தவில்லை; அவளுக்குப் பிடித்ததைப் படிக்கட்டும் என நினைத்தேன். இப்போ Photography படிக்கணும் என்கிறாள். பிள்ளைகள் விரும்பும் விஷயத்தைச் செய்ய அனுமதி கொடுப்பதுதான் பெற்றோர்களின் கடமை,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “தர்பூசணி திவாகருக்கு GP முத்து கொட்டிய Fire! என்னா பேச்சு!”

More in Cinema News

To Top