Connect with us

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற கிறிஸ்டோஃபர் நோலனின் Oppenheimer – பாராட்டு மழை படக்குழு

Cinema News

7 ஆஸ்கர் விருதுகளை வென்ற கிறிஸ்டோஃபர் நோலனின் Oppenheimer – பாராட்டு மழை படக்குழு

திரையுலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் கிறிஸ்டோஃபர் நோலனின் Oppenheimer திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஆஸ்கார் விருது வழங்கும்போதும் நமக்கு பிடித்த பிரபலங்கள் அந்த உயரிய விருதை வாங்குவார்களா என்ற எதிர்பார்ப்பு அரண் போல் எழுந்து நிற்கும் .

அந்தவகையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய Oppenheimer படம் சுமார் 13 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி இருந்த நிலையில் தற்போது 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது Oppenheimer திரைப்படம்; படத்தின் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் விருதை பெற்றுக் கொண்டனர்

Oppenheimer படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் பெற்றுள்ளார் . இதுவரை 8 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிரிஸ்டோபர் நோலன் முதல்முறையாக வென்றுள்ளார்

Oppenheimer படத்தில் சிறப்பாக நடித்ததற்காக Cillian Murphy-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது Oppenheimer படத்திற்கு வழங்கப்பட்டது

சிறந்த படத்தொகுப்புக்காக Oppenheimer திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது; படத்தின் படத்தொகுப்பாளர் ஜெனிஃபர் லேம் விருதை பெற்றுக் கொண்டார்

Oppenheimer படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ராபர்ட் டௌனி ஜூனியருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதில் சுமார் 7 பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ள நட்சத்திரங்களுக்கு தற்போது பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top