Connect with us

Box Office Success 💥 | ‘Tere Ishq Mein’ Collects ₹152 Cr Worldwide 🎬

Cinema News

Box Office Success 💥 | ‘Tere Ishq Mein’ Collects ₹152 Cr Worldwide 🎬

நடிகர் தனுஷ் – இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகை க்ரித்தி சனோன் கதாநாயகியாக நடித்துள்ளதுடன், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலுவாக அமைந்தன.

வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சிலர் கதையமைப்பு மற்றும் திரைக்கதை குறித்து கலவையான விமர்சனங்களையும் முன்வைத்தனர். இருப்பினும், விமர்சனங்களைத் தாண்டி வசூல் ரீதியாக படம் தொடர்ந்து வலுவாக முன்னேறி வருகிறது.

இந்த நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.152 கோடி வசூல் செய்து குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த சாதனை, தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியின் வெற்றிப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💥“தமிழநாட்டை ஆளப் போவது விஜய்!” — செங்கோட்டையன் வாக்கியம் வைரல்!

More in Cinema News

To Top