Connect with us

பிக் பாஸ் பூர்ணிமா ஹீரோயினாக நடிக்கும் படத்தின் கதை இதுதானா?!

Cinema News

பிக் பாஸ் பூர்ணிமா ஹீரோயினாக நடிக்கும் படத்தின் கதை இதுதானா?!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராக பூர்ணிமா நடித்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் அவர் வெளியே வந்து விடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் போட்டியாளர் பூர்ணிமா ஏற்கனவே ’பிளான் பண்ணி பண்ணனும்’, ’சோட்டா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான நயன்தாராவின் ’அன்னபூரணி’ திரைப்படத்தில் அவரது தோழியாக நடித்திருந்தார். இந்த நிலையில் பூர்ணிமா நடித்த ’செவப்பி’ என்ற திரைப்படம் ஆகா ஓடிடி தளத்தில் ஜனவரி 12ஆம் தேதி நேரடியாக வெளியாக உள்ளது.

எம்.எஸ் ராஜா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் பூர்ணிமா முக்கிய கேரக்டரிலும் ரிஷிகாந்த், ராஜாமணி, அத்வேதன், செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவீன் குமார் இசையில் மனோகரன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் 1990களில் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஐந்து வயது சிறுவனை சுற்றி நடக்கும் கதை ஆகும்.

அந்த சிறுவன் ஆசையோடு ஒரு கோழியை வளர்க்கும் நிலையில் ஒரு தந்தை தன் குழந்தைகள் மீது அதிக அன்பை காட்டுவது போல அந்த கோழியை பாதுகாப்பாக சிறுவன் வளர்த்து வருகிறான். ஒரு கட்டத்தில் அந்த கோழியை சிறுவன் பிரிய நேரிடும் போது அந்த கோழியால் கிராமமே இரண்டாகிறது. இறுதியில் அந்த சிறுவனும் கோழியும் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் இந்த படத்தின் கதை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top