Connect with us

“Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

Cinema News

“Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

பிக் பாஸ் சீசன் 9, 50 நாட்களை கடந்துவிட்டது. கடந்த வாரம் வீட்டுக்குள் நடந்த டாஸ்க் ரசிகர்களுக்கு கடுப்பேற்றினாலும், வார இறுதியில் வந்த விஜய்சேதுபதி போட்டியாளர்களை சரியாக வச்சு செய்வதாலேயே பார்வையாளர்கள் சிரித்தனர். குறிப்பாக வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிரஜன், சாண்ட்ராவை நேரடியாக கேள்விகளால் திணறடித்ததும் வைரலானது.

இதையடுத்து நேற்று வீட்டுக்குள் அமைதியான சூழலில் விஜய் சேதுபதி எல்லோருடனும் பேசி, நாமினேஷனில் இருந்த அமீத், அரோரா, திவ்யா, கனி, ரம்யா, சபரி, சாண்ட்ரா, சுபிக்ஷா, விக்ரம், பாரு என அனைவரும் சேஃப் என அறிவித்தார். கடைசியாக கெமி மற்றும் பிரஜன் மட்டும் மீதமிருந்தனர். இருவரில் யார் தொடர்வார்கள் என்பதை பிக் பாஸ் முடிவு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

பின், இரு கார்களில் இருவரும் ஏற, எந்த கார் மீண்டும் வீட்டுக்குள் வருகிறதோ அந்த போட்டியாளர் சேஃஃப் என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்போது ஆரம்பித்தது தான் புது நாடகம்! பிரஜன் வெளியே போகலாம் என்று நினைத்த சாண்ட்ரா, “அச்சு… போகாதே… நானும் வர்றேன்!” என்று கதறி அழுது, கார் பின்னாடியே ஓடிக் கொண்டு அட்டகாசம் செய்தார். மற்ற போட்டியாளர்கள் இது ஒரு விளையாட்டு தான் என்று சொல்லியும், அவர் ஓவராகவே ரியாக்ட் செய்தார்.

இதோடு முடிந்து விட்டதா? இல்லை! பிரஜன் வெளியில் சென்ற காரே திரும்பி வீட்டுக்குள் வந்ததும், சாண்ட்ரா ஓடி சென்று பிரஜனை கட்டிப்பிடித்து கதறி அழுது, அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார். இதைப் பார்த்த போட்டியாளர்கள் கூட, “இது யாரையும் நம்ப வைக்கும் மாதிரி இருக்கா?” என்று கேலி செய்தனர்.

மேலும், சனிக்கிழமை விஜய்சேதுபதி, “FJ வீட்டுக்காரர்களுக்கு பால் ஊத்துவேன்” என்று சொன்னதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை என்று கேட்டபோது, சாண்ட்ரா, “சார்… அவர் அப்படி சொன்னதே எனக்கு தெரியாது” என்று சொன்னார். ஆனால் உண்மையில், அந்த நேரத்தில் அவர் அதைக் கேட்டு சிரித்திருப்பதை ரசிகர்கள் வெளிச்சம் போட்டு காட்டினர்.

இதற்கிடையில் நேற்று நடந்த மயக்கம் ட்ராமா கூட ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது. “இவங்க இருவரும் சீரியலில் இப்படிப் பண்றாங்கன்னா ரெண்டு பேருக்கும் நல்ல வாய்ப்பாவது வந்திருக்கும்!” என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். சாண்ட்ரா–பிரஜன் இருவருமே ஓவராக நடித்து “நாங்கள்தான் சிறந்த தம்பதி” என்று நிரூபிக்க வருகிறீர்களா? என்று நெட்டிசன்ஸ் கேளிக்கை செய்து வருகின்றனர்.

More in Cinema News

To Top