Connect with us

விரைவில் ‘அயலான்’ இசை வெளியீட்டு விழா! அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

Cinema News

விரைவில் ‘அயலான்’ இசை வெளியீட்டு விழா! அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. SK 21 படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் இரண்டும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாம். அதாவது சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளதால், அதனுடன் SK 21 அப்டேட்டையும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படத்தின் ஷூட்டிங் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பட்ஜெட் பிரச்சினை, கொரோனா லாக் டவுன் என பல பிரச்சினைகளை சந்தித்த அயலான், தற்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார், சிவகார்த்திகேயனின் அயலானையும் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

படம் தொடங்கிய சில மாதங்களிலேயே ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸானது. ஏஆர் ரஹ்மான் இசையில் அவரே பாடியிருந்த ‘வேற லெவல் சகோ’ என்ற பாடல் கவனம் ஈர்த்திருந்தது. அயலான் ரொம்பவே தாமதம் ஆகிவிட்டதால், ‘வேற லெவல் சகோ’ பாடலை மாற்றித் தருவதாக AR ரஹ்மான் கூறினாராம். ஆனால், பாடல் ஏற்கனவே ஷூட் செய்துவிட்டதால் வேண்டாம் என மறுத்துள்ளார் ரவிக்குமார். இதனால் அதற்கும் சேர்த்து அயலான் செகண்ட் சிங்கிளை தரமாக கொடுத்துள்ளாராம் இசைப் புயல்.

இப்பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதேபோல், அயலான் இசை வெளியீட்டு விழா குறித்தும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, அயலான் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ளதாம். முக்கியமாக இதில் AR ரஹ்மானின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனுக்காக AR ரஹ்மான் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் அயலான் படத்தில் நடித்துள்ளனர். அயலான் தாமதமாக கிராபிக்ஸ் வேலைகள் காரணம் என சொல்லப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அயலானில் ஒவ்வொரு காட்சியையும் கிராபிக்ஸில் செதுக்கி வருகிறாராம் இயக்குநர் ரவிக்குமார். இதனால் பொங்கலுக்கு சூப்பர் ட்ரீட் இருப்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top