Connect with us

அடிவாங்கிய ஆரியன், 4 நாட்களில் ரியோ ராஜ் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி!

aan pavam

Cinema News

அடிவாங்கிய ஆரியன், 4 நாட்களில் ரியோ ராஜ் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி!

Rio Raj: விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய “ஆரியன்” திரைப்படம் ஆரம்பத்தில் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஓபனிங் வசூல் தரவும் பெற்றது. ஆனால் சில விமர்சனங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்துக்கள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறைந்த அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதை சரி செய்ய படக்குழு திங்கள்கிழமை முதல் புதுக்கட்டமைக்கப்பட்ட டிரிம் வெர்ஷன்-ஐ வெளியிட்டுள்ளது.

ஆனாலும், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் பெரிதாக இல்லை என்பது தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை “ஆரியன்” திரைப்படம் சுமார் ₹4.84 கோடி வசூலை அடைந்துள்ளது. விஜய், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், படத்தின் உயர்ந்த பட்ஜெட் காரணமாக இந்த வசூல் மிகப்பெரிய வெற்றியாக கருதப்படவில்லை. ரசிகர்கள், புதிய டிரிம் வெர்ஷன் நல்லா இருக்கு என, படத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கையிட்டுள்ளனர்.

அடுத்ததாக, ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் நடிப்பில் உருவான “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படம், முதல் நாளில் ₹48 லட்சம் வசூலைப் பதிவு செய்திருந்தது. ஆனால் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் வசூல் சிறப்பாக அதிகரித்து, மொத்தம் 4 நாட்களில் உலகளவில் ₹5.1 கோடி வசூலை எட்டியது.

இந்த படத்தை கலையரசன் இயக்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் உருவாகி, தொடக்கத்தில் சிறிய வரவேற்பு பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பை பெற்றது ரசிகர்களையும் படக்குழுவையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  17 நாட்களில் பைசன் அதிரடி, மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணி வெற்றி

More in Cinema News

To Top