Connect with us

அருண் விஜயின் ‘ரெட்ட தல’ – இரட்டை வேடம், இருண்ட உலகம்… வெளியான டார்க் தீம்

Cinema News

அருண் விஜயின் ‘ரெட்ட தல’ – இரட்டை வேடம், இருண்ட உலகம்… வெளியான டார்க் தீம்

சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் திருக்குமரன், தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘ரெட்ட தல’ படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளதுடன், பிடிஜி யூனிவர்சல் நிறுவனம் தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளது. இப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், ‘ரெட்ட தல’ படத்தின் டார்க் தீம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை சாம் சி.எஸ் எழுதி, இசையமைத்து பாடியுள்ளார். முன்னதாக வெளியான ‘கண்ணம்மா’ பாடல், சாம் சி.எஸ் எழுதிய வரிகளில் தனுஷ் குரலில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார் ரேஸில் முழு கவனம் செலுத்தும் அஜித் – 2027 வரை அட்டவணை வெளியீடு!

More in Cinema News

To Top