Connect with us

அமீரின் கருத்து: ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்க்கு அரசியலில் நல்லதல்ல…. ?

Cinema News

அமீரின் கருத்து: ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்க்கு அரசியலில் நல்லதல்ல…. ?

சென்னை: விகடன் நிறுவனமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து வெளியிட்ட “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கியவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய விஜய், தமிழக அரசியல் நிலவரத்தை கடுமையாக விமர்சித்தார். “மக்கள் உணர்வுகளை மதிக்காத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி செயல்படும் ஆட்சியாளர்கள் மக்களிடம் மைனஸ் ஆக்கப்பட்டுவிடுவார்கள்” என அவர் எச்சரித்தார்.

அதே நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது. பிறப்பால் ஒருவருக்கு பதவி கிடைப்பதை மக்கள் இனி ஏற்க மாட்டார்கள். மக்கள் ஆதரிக்கும் ஒரு கருத்தியல் தலைவர்தான் தமிழகத்தை ஆள வேண்டும்” எனக் கூறினார்.

இந்த கருத்துகள் திமுக வட்டாரத்தில் கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் மக்களாட்சிதான் நடக்கிறது; அப்படி தெரியாமல் கருத்து கூறும்வர்கள் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் பேச வேண்டும்” என்று கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குநர் அமீர், தனது வாட்ஸ் அப் ஸ்டேடசில், “செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்க்கு அரசியலில் நல்லதல்ல” என பதிவிட்டு மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த அரசியல் புயல் 2026 தேர்தலுக்கு வழிவகுக்கும் முக்கியமான விவாதமாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top