Connect with us

லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு அமரன் படம் சிறப்பாக இருந்தது – இயக்குநர் கோபி நயினார் விமர்சனம்..!!

Cinema News

லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு அமரன் படம் சிறப்பாக இருந்தது – இயக்குநர் கோபி நயினார் விமர்சனம்..!!

எஸ்.கேவின் அமரன் திரைப்படம் ஒரு பக்கம் நல்ல ஆதரவை பெற்று வந்தாலும் மறுபக்கம் சில எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது . அந்தவகையில் தற்போது இயக்குநர் கோபி நயினார் இப்படம் குறித்து தனது விமர்சனத்தை எடுத்து வைத்துள்ளார்.

அமரன் திரைப்படம் குறித்து இயக்குநர் கோபி நயினார் கூறியதாவது :

சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தை பார்த்தேன். இருவரது சிறப்பான நடிப்பையும் பாராட்டியுள்ளதால் இது ஒரு சிறந்த திரைப்படம் என கருதுவதாக எனக்கு புரிய வருகிறது. இந்த திரைப்படம் சொல்ல வரும் கருத்தை பற்றி யாரும் பேச மறுக்கிறார்களா இல்லை கவனிக்க மறந்து விட்டார்களா என்ற கேள்வி எழுகிறது

படத்தின் திரைக்கதைக்கு பின் இருக்கும் ஒரு சமூகத்தின் துயரத்தை யாரும் கவனிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒருவன் ஒரு குழந்தையை தனது துப்பாக்கியால் ஒரே குண்டில் கொல்கிறான். குழந்தை துடித்து இறக்கிறது. அதனைக் கண்ட தாய் துடிதுடிக்கிறாள். இதனைக் கண்ட அனைவரும் அவர் எவ்வளவு அருமையாக சுடுகிறார், அது குழந்தை என்பதால் இரண்டு மூன்று குண்டுகளால் துளைக்கப்பட்டு துடித்து சாகக்கூடாது என ஒரே குண்டால் அதன் இதயத்தை நோக்கி பிரமாதமாக சுட்டு ஒரே நொடியில் அருமையாக கொல்கிறார் என சிலாகித்து பேசுகின்றனர். ஆனால் அங்கு கத்தி கதறி அழும் அந்த தாயை யாரும் கவனிக்கவில்லை.

எல்லோரும் அந்தக் குழந்தை எப்படி நேர்த்தியாக சுட்டுக் கொல்லப்பட்டது என்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அந்த குழந்தையின் மரணமும் அதன்பின் இருக்கும் வேதனையும் மறைக்கப்பட்டதே இந்த திரைப்படத்தின் கருத்தாக இருக்கிறது. நானும் சொல்கிறேன் அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அமரன்: 2024 ஆம் ஆண்டின் பெரும் வெற்றி, நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது!

More in Cinema News

To Top