Connect with us

“என் அப்பா சங்கி கிடையாது..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்! கண்கலங்கிய தலைவர்!”

Cinema News

“என் அப்பா சங்கி கிடையாது..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்! கண்கலங்கிய தலைவர்!”

3 மற்றும் வை ராஜா வை என இரு படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல ஆண்டுகள் கழித்து புதிதாக இயக்கியுள்ள படம் தான் லால் சலாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்திற்காக கடுமையாக உழைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்த மாதம் படம் வெளியாக உள்ள நிலையில், உற்சாகத்தில் உள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் மேடை ஏறி பேசிய நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது எமோஷனலாகி விட்டார். சமூக வலைதளத்தில் இருந்து எப்போதுமே விலகியே இருக்கிறேன்.

ஆனாலும், என்னுடைய டீம் அடிக்கடி ஒரு விஷயத்தை காட்டிக் கொண்டே இருந்தனர். அதிலும் குறிப்பாக சங்கி என முத்திரை குத்தப்படும் அந்த வார்த்தை எனது மனதை ரொம்பவே உறுத்துகிறது. உங்களுக்கு எல்லாம் தெளிவா புரியும்படி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை. எங்கப்பா சங்கியா இருந்திருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கவே மாட்டார். மதங்களை கடந்து மனிதர்களை மட்டுமே நேசக்கூடிய மனிதர் அவர் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.

அயோத்தியில் சமீபத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் முதலில் ராமரை தரிசித்த 150 பேரில் நானும் ஒருவன் என நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது எனக் கூறியிருந்தார். பாபர் மசூதி பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில், அயோத்தியில் கட்டியுள்ள ராமர் கோயிலுக்கு சென்ற ரஜினிகாந்த் மீது கடுமையான விமர்சனங்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பல போராட்டங்கள், தியாகங்களுக்கு பிறகு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது என பேசிய நிலையில், அவரது பேச்சில் தனக்கு விமர்சனம் உண்டு என பா. ரஞ்சித் ப்ளூ ஸ்டார் இசை வெளியீட்டு விழாவில் பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படி பேசியதை கேட்டதுமே நடிகர் ரஜினிகாந்த் கண்கள் கலங்கிய காட்சிகள் ரசிகர்களை நெகிழ வைத்தன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசும் போது, கடந்த 2 ஆண்டுகளான என்னோட 2 பசங்களை சரியா கவனித்துக் கொள்ளவில்லை. அவங்க பிடி விழாவுக்கு கூட போகல, ஆனால் அவர்கள் என்னை புரிந்துக் கொண்டு எனக்கு சப்போர்ட் பண்ணாங்க என பாராட்டி பேசியுள்ளார்.

See also  ஹனிமூன் பற்றியப் பதிவால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய த்ரிஷா!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top