Connect with us

ஐஸ்வர்யா– அபிஷேக் விவாகரத்து? ‘இதோடு முற்றுப்புள்ளி!’ – நடிகர் கடும் எச்சரிக்கை

Cinema News

ஐஸ்வர்யா– அபிஷேக் விவாகரத்து? ‘இதோடு முற்றுப்புள்ளி!’ – நடிகர் கடும் எச்சரிக்கை

பாலிவுட் மட்டுமல்லாது, தென்னிந்திய ரசிகர்களிடமும் தனி இடம் பிடித்த நடிகை ஐஸ்வர்யா ராய். சமீபத்தில் அவர் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியரின் விவாகரத்து குறித்து கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டே வந்தன. அபிஷேக் குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யா தனியாக வசிக்கிறார் எனவும், தம்பதியருக்கு இடையே பிரச்சனை உள்ளது எனவும் பல செய்திகள் பரவின.

ஆனால் இவ்வாறான வதந்திகள் குறித்து இதுவரை இருவரும் எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாகவே இருந்தனர். தற்போது முதன்முறையாக இந்த விவகாரம் குறித்து அபிஷேக் பச்சன் ஒரு பேட்டியில் வெளிப்படையாகவும், கோபமாகவும் பேசியுள்ளார்.

“என்னைப் பற்றி பரப்பப்படும் விவாகரத்து செய்திகள் முழுக்க முழுக்க பொய். அது manufactured rubbish,” என அவர் கடுமையாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,
“திருமணத்திற்கு முன்பு எங்கள் திருமணம் எப்போது என்று பேசினார்கள். திருமணத்திற்கு பிறகு இப்போது விவாகரத்து எப்போது என்று கேட்கிறார்கள். இதெல்லாம் அர்த்தமில்லாத குப்பை. என்னைப் பற்றி ஐஸ்வர்யாவுக்கு நன்றாக தெரியும்; அவரைப் பற்றி எனக்கும் தெரியும். நாங்கள் மகிழ்ச்சியான குடும்பமாக இருக்கிறோம் – அதுதான் முக்கியம்,” என்று கூறியுள்ளார்.

அத்துடன்,
“கிசுகிசுவில் உண்மை இருந்தால் தான் அது என்னை பாதிக்கும். என் குடும்பத்தை பற்றி பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன். இந்த உருவாக்கப்பட்ட பொய்களையும் குப்பை செய்திகளையும் இனிமேல் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இதோடு முற்றுப்புள்ளி வையுங்கள்,” என அபிஷேக் பச்சன் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.

இந்த நேர்மையான மற்றும் கடுமையான பதிலடி, விவாகரத்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Mother–Daughter Magic ✨💖 சமந்தாவின் Wedding Pic Internetல் வைரல்!

More in Cinema News

To Top