Connect with us

குமுதா ஹாப்பி அண்ணாச்சி : வேட்டையன் படப்பிடிப்பில் தலைவருடன் ரித்திகா – வைரல் போட்டோ

Cinema News

குமுதா ஹாப்பி அண்ணாச்சி : வேட்டையன் படப்பிடிப்பில் தலைவருடன் ரித்திகா – வைரல் போட்டோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தலைவருடன் நடிகர் ரித்திகா எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது செம வைரல் ஆகி வருகிறது.

ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் வேட்டையன் . இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை ரித்திகா சூப்பர் ஸ்டாருடன் கலந்துரையாடி அவருடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது .

ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் இப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Cinema News

To Top