Connect with us

Test படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த நடிகை நயன்தாரா! Viral Pics!

Cinema News

Test படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த நடிகை நயன்தாரா! Viral Pics!

பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சசிகாந்த். இவர் தமிழில் ஒய் நாட் ஸ்டுடியோஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தமிழ்ப் படம் 1,2, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, மண்டேலா, காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடிப் பேசவும், காவியத் தலைவன், கல்யாண சமையல் சாதம்,ஏலே, தலைகூத்தல் போன்ற பல படங்களைத் தயாரித்தவர். அதேபோல் இந்தி, தெலுங்கு, மலையாளத்திலும் படத் தயாரிப்பில் ஈடுபட்டவர்.

அடிப்படையில் ஆர்க்கிடெக்ட் ஆக இருந்த சசிகாந்த், தமிழ் சினிமாவில் 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். இவர் 2015ஆம் ஆண்டு முதல் விளையாட்டை மையமாக வைத்து ‘’தி டெஸ்ட்” என்னும் படத்தை இயக்குவதற்காக கதை எழுதி வந்தார். சமீபத்தில் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இன்று நிறைவுபெற்றுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் முக்கியவேடங்களில் நடித்திருக்கின்றனர். இதுகுறித்து நயன்தாரா தனது இன்ஸ்டாவில் பதிந்தது என்னவென்றால், ‘டெஸ்ட் படத்தில் வரும் குமுதா என்னும் என்னும் கதாபாத்திரம், என் நடிப்பு வாழ்வில் கிடைத்தமைக்கு நன்றி. எனக்கு இப்படம் எப்போதும் தேவைக்குரியதாக நினைவுக்குரிய வகையில் இருக்கும்.

நான் குமுதாவை மிஸ் செய்யப்போகிறேன். குமுதா கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்புக்கொடுத்த இயக்குநர் சசிகாந்துக்கு நன்றி. குமுதாவுக்குப் பக்கபலமாக இருந்த நடிகர் மாதவனுக்கு நன்றி. எப்போதும் முன்னுதாரணமாக இருக்கும் நடிகர் சித்தார்த்துக்கு நன்றி. டெஸ்ட் என்னும் தொழிலாளிகளின் அன்பினை புரிந்துகொள்ள நீங்கள் வெகுநாட்கள் காத்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்’ என நெகிழ்ச்சியுடன் பதிந்துள்ளார். இந்தப் பதிவு பலரால் கவனம்பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top