Connect with us

“உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை” – மகன் மற்றும் மகள் குறித்து நடிகை ஜோதிகா போட்ட ஸ்பெஷல் போஸ்ட்..!!

Cinema News

“உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை” – மகன் மற்றும் மகள் குறித்து நடிகை ஜோதிகா போட்ட ஸ்பெஷல் போஸ்ட்..!!

தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்பால் முன்னணி நட்சத்திரங்களாக உருமாறியவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா . திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .

கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த சூப்பர் ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . ஆனால் பெற்றோர் ஆன பின் இந்த ஜோடி இணைந்து நடிக்காமல் இருந்து வருவது, ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

சூர்யா வழக்கம் போல் மாஸாக நடித்து வந்தாலும் ஜோதிகா பார்த்து பார்த்து நல்ல கதைகளை தேர்வு செய்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் .

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பையில் சில காலம் தங்கி இருக்கிறார்கள். அது முடிந்தவுடன் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுவோம் என ஜோதிகா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

இந்நிலையில் மகள் தியா மற்றும் தேவ் பள்ளியில் Sports Day நடந்துள்ளது. அதில் தியா தனது அணியுடன் இணைந்து Sports Day கோப்பையை வென்றுள்ளார்.

இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் நடித்து ஜோதிகா பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதோடு சேர்ந்து தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து தியா மற்றும் தேவ் இருவரையும் குறிப்பிட்டு ‘உங்கள் இருவரால் எங்களுக்கு பெருமை’ என ஜோதிகா கூறியுள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே - வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

More in Cinema News

To Top