Connect with us

“அமைச்சர் உதயநிதியை சந்தித்து நிவாரண நிதி வழங்கிய பிரபல நடிகர்!”

Cinema News

“அமைச்சர் உதயநிதியை சந்தித்து நிவாரண நிதி வழங்கிய பிரபல நடிகர்!”

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் அமைச்சர் உதயநிதியை சந்தித்து ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக அளித்த நிலையில் இன்னொரு பிரபல நடிகரும் அதே தொகையை கொடுத்துள்ளார். சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் தமிழக அரசுக்கு தாராளமாக வெள்ள நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது பங்காக 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளித்தார்.

இதையடுத்து தற்போது நடிகர் விஷ்ணு விஷால் ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியாக உதயநிதியிடம் அளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளை மேலும் வலுப்படுத்துகிற வகையில் பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், அரசின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் – சகோதரர் விஷ்ணு விஷால் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும் நன்றியும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்த மனு, ரங்கராஜுக்கு 6.5 லட்சம் மாதக் கட்டணம்

More in Cinema News

To Top