Connect with us

“இந்தமுறை Plane மேல Dance ஆடணும்..! மேடையில் ஷாருக்கானை கலாய்த்த இயக்குனர் மணிரத்னம்!”

Cinema News

“இந்தமுறை Plane மேல Dance ஆடணும்..! மேடையில் ஷாருக்கானை கலாய்த்த இயக்குனர் மணிரத்னம்!”

பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தக் லைஃப் படத்தை இயக்க ரெடியாகிவிட்டார் மணிரத்னம். இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கமல்ஹாசனுடன் மீண்டும் மணிரத்னம் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. தக் லைஃப் ஷூட்டிங் இந்த மாதமே தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக தக் லைஃப் உருவாகவுள்ளது.

இந்நிலையில், மணிரத்னத்துக்கு இந்தியன் ஆஃப் தி இயர் 2023 என்ற விருது வழங்கப்பட்டது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், ராக்ஸ்டார் அனிருத் ஆகியோருக்கும் இந்தியன் ஆஃப் தி இயர் 2023 விருதுகள் வழங்கப்பட்டன. மும்பையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஷாருக்கான், மணிரத்னம் இடையே நடந்த உரையாடல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இந்தியன் ஆஃப் தி இயர் 2023 விருதை பெற்றுக்கொண்ட ஷாருக்கான், “இந்தாண்டு மட்டுமில்லாமல் இதற்கு முன்பும் இனி வரும் காலங்களிலும் சிறந்த இந்தியனாக இருப்பேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், நன்றி” என உருக்கமாக பேசினார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அடுத்து எப்போது மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பீர்கள்” என ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பினார். மேலும், மணிரத்னமும் இங்கே இருப்பதால் அவரிடமும் இதைப் பற்றி கேட்க வேண்டும் என ஷாருக்கானுக்கு கீ கொடுத்தார். உடனே ஜாலி மோடுக்கு மாறிய ஷாருக்கான், மணிரத்னத்திடம் அடுத்து எப்போது படம் பண்ணலாம் என கேட்டார்.

மேலும், உயிரே படத்தில் தையா தையா பாடலில் ரயிலின் மீது டான்ஸ் ஆடியதை சுட்டிக் காட்டிய ஷாருக்கான், இந்த முறை விமானத்தின் மேலே ஏறி டான்ஸ் ஆடிட வேண்டியதான் என்றார். இதனைக் கேட்டு சிரித்த மணிரத்னம், சீக்கிரமே பிளைட் வாங்கிவிடுகிறேன், அதன்பின்னர் இணையலாம் என்றார். இதனை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்ட ஷாருக்கான், மணிரத்னமிடம், “இப்போது எனது படங்கள் போகுற வேகத்துல பிளைட் வாங்குறது எல்லாம் விஷயமே கிடையாது” என நக்கலாக கமெண்ட் கொடுத்தார்.

அதாவது கடந்தாண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான், ஜவான், டங்கி படங்கள் இணைந்து 2500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனை வைத்தே மணிரத்னமிடம் பிளைட் வாங்கிவிடலாம் என ஷாருக்கான் சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது. ஆனால், மணிரத்னமோ நானே சொந்தமாக பிளைட் வாங்கிட்டு வருகிறேன். அதன்பின்னர் கண்டிப்பாக இணையலாம் என மேடையில் இருந்த ஷாருக்கானை காமெடியாக கலாய்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top