Connect with us

“த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவே இல்லை..? நான் இதைத்தான் சொன்னேன்! நடிகர் மன்சூர் அலிகான் சொன்ன விஷயம்!”

Cinema News

“த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவே இல்லை..? நான் இதைத்தான் சொன்னேன்! நடிகர் மன்சூர் அலிகான் சொன்ன விஷயம்!”

அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பழைய திரைப்படங்களில் குஷ்பு, ரோஜா போன்ற நடிகைகளை கற்பழிப்பு செய்வது தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருந்தது. ஆனால் இப்போது வரும் படங்களில், அது போன்ற காட்சிகள் இடம் பெறுவதில்லை. லியோ படத்தில் திரிஷாவுடன் அப்படியான காட்சிகள் ஏதும் இடம் பெறுமா? என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படியான காட்சிகள் ஏதும் அமையவில்லை” என்று பேசினார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் பேச்சிற்கு திரிஷா உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம், இந்த விவகாரத்தில் தலையிட்டு, நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டது. அதன்படி, பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் பதிவிட்ட த்ரிஷா ‘தவறு செய்வது மனித இயல்பு; மன்னிப்பது கடவுள் குணம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான், “ நடிகை த்ரிஷாவிடம் நான் மன்னிப்பு கேட்கவில்லை. தொலைபேசியில் ‘மரணித்துவிடு’ என்று சொன்னதை ‘மன்னித்து விடு’ என்று மக்கள் தொடர்பாளர் தவறாக புரிந்து கொண்டார். மீண்டும் பிரச்சினையை வளர்க்க வேண்டாம் என்பதால், அந்த நேரத்தில் அமைதியாகி விட்டேன்.” என்று பேசியிருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நிலம் வழியாக அல்ல, வானில் வழியாக பறக்கப் போகும் TVK தலைவர் விஜய்

More in Cinema News

To Top