Connect with us

“இத்தனை கோடி நஷ்டமானதா நடிகர் கார்த்தியின் Japan படத்தால்?!”

Cinema News

“இத்தனை கோடி நஷ்டமானதா நடிகர் கார்த்தியின் Japan படத்தால்?!”

கார்த்தியின் 25வது படமாக உருவான ஜப்பான், தீபாவளி ஸ்பெஷலாக கடந்த வாரம் 10ம் தேதி ரிலீஸானது. ராஜூ முருகன் இயக்கிய இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இசையில் கார்த்தியுடன் அனு இம்மானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜப்பான் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. ஆனால், இந்தப் படத்துக்கு முதல் நாளில் இருந்தே நெகட்டிவான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்தன.

இதனால், பாக்ஸ் ஆபிஸிலும் ஜப்பான் கலெக்‌ஷன் பெரிதாக இல்லை. முதல் நாளில் 4 கோடியும், இரண்டாவது நாளில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. தீபாவளி தினத்தன்றும் 4 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூலிக்கவில்லை. இதனால், இந்தாண்டு தீபாவளி ரேஸில் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வின்னர் ஆனது.

இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் இதுவரை 14 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாம். இதனால் ஜப்பான் தயாரிப்பாளருக்கு 30 கோடி ரூபாய் வரை நஷ்டம் என சொல்லப்படுகிறது. அதாவது கடந்தாண்டு வெளியான கார்த்தியின் சர்தார், தியேட்டர் ஷேரிங் மூலம் 25 கோடி ரூபாய் வரை லாபம் கொடுத்தது. அதேபோல், சாட்டிலைட் ரைட்ஸும் அமோகமாக விற்பனையானது.

ஆனால், ஜப்பான் திரைப்படத்துக்கு நெகட்டிவான ரிசல்ட் கிடைத்துள்ளதால், சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையாவதில் சிக்கல் எழுந்துள்ளதாம். இதனால் பாக்ஸ் ஆபிஸ், சாட்டிலைட் ரைட்ஸ் போன்றவை மூலம் ஒட்டுமொத்தமாக 30 கோடி ரூபாய் வரை நஷ்டம் அடைந்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியின் கேரியரில் இது மிகப் பெரிய தோல்வி என்றே சொல்லப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top