Connect with us

அபிநயின் இறுதி நாட்கள்.. பாலா சொன்னது ரொம்பவும் மனசை நொறுக்கும்!

Cinema News

அபிநயின் இறுதி நாட்கள்.. பாலா சொன்னது ரொம்பவும் மனசை நொறுக்கும்!

‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான அபிநய், தொடர்ந்து ‘ஜங்ஷன்’ படத்தில் ஹீரோவாக நடித்தவர். படம் வெற்றி பெறாததால், ‘தாஸ்’, ‘என்றென்றும் புன்னகை’ போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தார். சில ஆண்டுகளாக கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அவதிப்பட்டு, அதிகமாக உடல் எடை குறைந்து அடையாளம் தெரிந்துக் கொள்ள முடியாத மாறிய நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

“அபிநய் என்னை சில மாதங்களாகத்தான் தொடர்பு கொண்டார். முதல் முதலில் யார் என தெரியவில்லை. புகைப்படம் அனுப்பியபோது அதிர்ச்சி அடைந்தேன். கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சைக்காகப் பணம் தேவைப்படுவதாக சொல்லினார். ‘எனக்கு எதாவது ஆகிவிடுமோ’ என்ற பயத்தை அடிக்கடி பகிர்ந்து கொள்வார். ‘மீண்டும் சினிமாவில் நடித்து விருதுகள் வாங்க வேண்டும்’ என்ற ஆசையை பலமுறை சொன்னார். நான் அவருக்கு தனியாக வீடு எடுத்து தங்க வைத்தேன். அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டே இருந்தன.

இறந்ததற்கு இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வாடகை கட்ட சொல்லி மெசேஜ் அனுப்பியிருந்தார். நான் பணம் அனுப்பியவுடன் வழக்கம்போல் ‘OK’ என்றுதான் எழுதுவார். ஆனால் அன்றோ, ‘Thank you brother, God bless you’ என்று அனுப்பினார். அதையே பார்த்தபோது ஏதோ மனசு கலங்கினது. மறுநாள் காலை அவர் இல்லை என்ற செய்தி வந்தது. அதிர்ச்சியாகி நின்றுபோனேன்.”

“அவர் அடிக்கடி ‘யாரும் இல்லாம அனாதையா நான் இறந்தாக கூடாது… என் இறுதிச்சடங்குக்கு எல்லாரும் வரணும்’ என்று சொல்வார். அவர் விருப்பம் போல நடிகர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் வந்தார்கள். குறைந்தது அவருடைய கடைசி ஆசையாவது நிறைவேற்றியது போல ஒரு மனநிறைவு இருக்கு. ‘I love you sir… நீங்க இல்லாட்டியும் உங்க நினைவு எப்போதும் இருக்கும். நிகழ்ச்சி நடத்த உதவிய அனைவருக்கும் பாலா நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெற்றிமாறன் – சிலம்பரசன் கூட்டணி! “அரசன்” படப்பிடிப்பு நவம்பர் 24 முதல் தொடக்கம்!

More in Cinema News

To Top