Connect with us

ரேஸில் நின்ற காரும்… கலங்காத அஜித்தும்! ஏகே கூல் வைப்ஸ் வைரல்

Cinema News

ரேஸில் நின்ற காரும்… கலங்காத அஜித்தும்! ஏகே கூல் வைப்ஸ் வைரல்

மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் குமாரின் டீமின் கார் திடீரென பழுதாகி பாதியிலேயே நின்ற சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த தருணத்தில் எந்தவித பதற்றமும் காட்டாமல், மிக கூலாக அஜித் பேசிய வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

“காரின் ரேடியட்டரில் சிறிய பிரச்சனை வந்திருக்கிறது. அதை விரைவில் சரி செய்துவிடுவார்கள் என்று நம்புகிறேன். இது வருத்தம்தான்… ஆனால் ரேஸ் என்றால் இப்படித்தான் இருக்கும்” என்று அவர் சொன்ன வார்த்தைகள், ஏகே-வின் அமைதியும் மன உறுதியும் எவ்வளவு உயர்ந்தது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த வருடம் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ என இரண்டு படங்களில் நடித்ததுடன், சர்வதேச கார் ரேஸ்களிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித். ஸ்பெயினில் நடந்த ரேஸில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்த அவர், அடுத்து அபுதாபியில் நடைபெறவுள்ள ரேஸிலும் கலந்துகொள்ள தயாராகி வருகிறார்.

சினிமாவாக இருந்தாலும் சரி, ரேஸாக இருந்தாலும் சரி – தோல்வி, தடைகள் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அமைதியாக முன்னேறும் அஜித்தின் அணுகுமுறை தான் இன்று ரசிகர்கள் “ஏகே செம கெத்து” என்று சொல்லக் காரணமாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மம்மூட்டி–மோகன்லால் போஸ்டர்! Morse Code-ல் ரிலீஸ் தேதி 🔥

More in Cinema News

To Top