Connect with us

“யாஷின் பிறந்தநாளுக்காக பேனர் வைத்த 3 ரசிகர்கள் பலி! Viral!”

Cinema News

“யாஷின் பிறந்தநாளுக்காக பேனர் வைத்த 3 ரசிகர்கள் பலி! Viral!”

கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் (24), முரளி (20), நவீன் (20) ஆகிய மூவரும் நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு சூரனகி என்ற கிராமத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க முடிவு செய்தனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் அங்கிருந்து மின்கம்பம் ஒன்றில் ஏறி பேனரை கட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு உதவி செய்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேனரில் இருந்து இரும்பு ப்ரேம், மின்கம்பத்தில் இருந்த கம்பியில் உரசியதால் மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூவரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த ஷிரஹட்டி எம்எல்ஏ சந்துரு லமனி, இரும்பு பேனர்களை பொது இடங்களில் கட்டவேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டதாகவும், உயிரிழந்தவர்களிடம் குடும்பத்தை சந்திக்குமாறு நடிகர் யாஷிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வைல்ட் கார்டு போட்டியாளர்களின் சம்பள விவரம் லீக்! யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள்?

More in Cinema News

To Top