Connect with us

சோதனை மேல் சோதனை : இந்தியன் 2 திரைப்படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம்..!!

Cinema News

சோதனை மேல் சோதனை : இந்தியன் 2 திரைப்படத்தின் 15 நிமிட காட்சிகள் நீக்கம்..!!

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சங்களை சந்தித்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் நீளத்தை படக்குழு குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது .

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் சுமார் 28 வருடங்களுக்கு பின் உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டாகி நடித்துள்ளது .

லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்தில் ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார் .

ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் கடந்த 12 வெளியானது .

இந்த நிலையில் இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றும் கொஞ்சம் அல்ல நிறைவே ஏமாற்றமாக உள்ளது என ரசிகர்கள் கருத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக இப்படத்தின் நீளமே படத்தை மிகவும் போரடிக்க செய்வதாக பெரும்பாலான ரசிகர்கள் இணையத்தில் கருத்து கூறி வருகின்றனர் .

இதன்காரணமாக இந்தியன் 2 படத்தில் 15 நிமிட காட்சியை படக்குழு நீக்கி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது . நாளை முதல் நீக்கப்பட்ட காட்சிகளோடு திரைப்படம் ஒளிபரப்பப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top