Connect with us

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது..!! கோவை போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

TTF_Vasan_Arrested

General News

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது..!! கோவை போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என சவடால் விட்டு வீடியோ வெளியிட்ட நிலையில், கோவை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பைக்கில் செல்வதை வீடியோவாக எடுத்து வெளியிடும் பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையில் சூலூர் மற்றும் போத்தனுர் என இரு காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் டிடிஎப் வாசன் பெங்களூரு தப்பிச் செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரை சூலூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். எனினும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி பிறகு பிணையில் விடுவித்துள்ளனர்.

போத்தனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஜாமீன் பெறப்பட்டு வெளிவந்த நிலையில் தற்போது, சூலூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

Twin throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் சமீபத்தில் பிரபல யூடியூபருமான ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக ஓட்டி அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். வாகன நெருக்கடி நிறைந்த கோவை – பாலக்காடு சாலையில் 150 கி.மீ.க்கு மேலான வேகத்தில் செல்லும் வீடியோ தான் அவர் மீதான நடவடிக்கைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in General News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top