Uncategorized
யூடியூப் சேனல் பிரபலம் கோபிக்கு நிச்சயதார்த்தம் …வைரலாகும் போட்டோ
யூடியூப் சேனலில் பிரபல கோபி மற்றும் சுதாகர் இருவரையும் தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. யூடியூப் சேனலில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ட்ரோல் செய்து பேசிய வீடியோகளின் மூலம் தமிழகம் முழுக்க மிகப்பிரபலம் அடைந்தனர்.

முன்னதாக ஹிப்ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த கோபி மற்றும் சுதாகர் கூட்டணி தொடர்ந்து “ஹேய் மணி கம் டுடே கோ டுமாரோ யா” எனும் திரைப்படத்தையும் தொடங்கினர். நீண்ட நாட்களாக இத்திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனிடையே தற்போது பரிதாபங்கள் கோபிக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ பரிதாபங்கள் கோபி நிச்சயதார்த்தம் இன்று ஜூன் 9ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படம் இதோ…
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
