Connect with us

நீ அடிச்சு தூக்கு கபிலா இது நம்ப காலம் : ரோஹித்தின் சத்தத்தை கொண்டாடிய தீர்த்த விராட் கோலி..

Featured

நீ அடிச்சு தூக்கு கபிலா இது நம்ப காலம் : ரோஹித்தின் சத்தத்தை கொண்டாடிய தீர்த்த விராட் கோலி..

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அபாரமாக ஆடிய இருவரும் நியூசிலாந்து அணியின் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டனர் . பின்னர் ரோகித் 101 ரன்களும், சுப்மன் கில் 112 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் ஆடி உள்ள சுப்மன் கில், அதற்குள் நான்கு ஒரு நாள் சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை அடித்த அவர், ஒரு நாள் போட்டியில் பல்வேறு சாதனனைகளையும் படைத்துள்ளார் .

இந்த பக்கம் நம்ப ஹிட் மேன் ரோஹித் ஷர்மா தற்போது அடித்துள்ள சதத்தை ரசிகர்கள் பலரும் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது சரியாக 1101 நாட்கள் கழித்து ஒரு நாள் போட்டியில் தனது சதத்தை பதிவு செய்துள்ளார் ரோஹித் . மேலும் முழு நேர கேப்டன் ஆன பிறகு அவர் அடித்த முதல் ஒரு நாள் சதமாகவும் இது மாறி உள்ளது. அதே போல, சர்வதேச போட்டியில் ஏறக்குறைய 500 நாட்கள் கழித்து தனது சதத்தையும் அவர் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, ஒருநாள் போட்டியில் தன்னுடைய 30ஆவது சதத்தை அடித்துள்ள ரோஹித் சர்மா, ஒரு நாள் போட்டியில் அதிக சதமடித்த ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் சமன் செய்துள்ளார். ஒரு நாள் போட்டியில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 46 சதங்களுடன் விராட் கோலி இரண்டாம் இடத்திலும், 30 சதங்களுடன் ரோஹித் ஷர்மா 3 ஆவது இடத்திலும் உள்ளனர். அடுத்து வரும் தொடர்களில் இதே ஃபார்மை ரோஹித் சர்மா தொடருவார் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு நம்ப ஹிட் மேன் னால பார்முக்கு வந்து இன்று தரமான சதம் அடித்ததை மற்றொரு நட்சத்திர வீரரும் ரோஹித் சர்மாவின் நெருங்கிய நண்பனுமான விராட் கோலி மைதானத்திலேயே கத்தி கொண்டாடியுள்ளார்

ரோஹித்தின் சதத்தை கோலி கொண்டாடி தீர்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top