Connect with us

வெறித்தனமான Work out-ல் யார்கர் கிங் நடராஜன்..! வைரல் வீடியோ..

Featured

வெறித்தனமான Work out-ல் யார்கர் கிங் நடராஜன்..! வைரல் வீடியோ..

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்னும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடராஜன் . சிறு வயதில் இருந்து கிரிக்கெட்டின் மீது அதீத கவனம் செலுத்தி வந்த நடராஜன் தனது அயராத உழைப்பால் ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடி தனது யார்கர் பந்துகளால் பல முன்னணி வீரர்களை தட்டி தூக்கி கெத்து காட்டினார் .

ஐபிஎல் தொடரில் கிடைத்த அங்கீகாரத்தால் இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் , ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி அங்கேயும் தனது தடம் பதித்து புகழ் பெற்று அனைவர்க்கும் பிடித்த வீரராக வலம் வந்துகொண்டிருக்கிறார் . ஆஸ்திரேலிய மண்ணில் இவர் நிகழ்த்திய அற்புதங்களை எந்த காலத்திலும் யாராலும் மறந்து விட முடியாது.

இப்படியே நடராஜன் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்க துரதிஷ்டவசமாக வெகு நாட்களாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்து வருகிறார் . மேலும் நடப்பாண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் நிச்சயம் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கபடுகிறது .

அண்மையில் பஞ்ச பூத தளங்களில் பிரசித்தி பெற்ற ஆகாய தலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் . பொன்னாடை மலர் மாலை அணிந்து கொண்டு நடராஜன் தமது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் .

இந்நிலையில் தற்போது தீவிரமாக Work out செய்யும் வீடியோவை நடராஜன் பகிர்ந்துள்ளார் .

https://instagram.com/stories/natarajan_jayaprakash/3025689699893930667?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY=

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "41 ஆண்டுகால Recordஐ முறியடித்த இங்கிலாந்தின் ஒல்லி போப்! குவியும் பாராட்டுக்கள்!"

More in Featured

To Top