Connect with us

ஆஸ்கர் நுழைவாயிலில் மண்டேலா…! இப்படியொரு நல்லபடம் கொடுத்ததற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன யோகி பாபு..!

Cinema News

ஆஸ்கர் நுழைவாயிலில் மண்டேலா…! இப்படியொரு நல்லபடம் கொடுத்ததற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்ன யோகி பாபு..!

சினிமா துறையில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் ‘மண்டேலா’ படம் இடம்பெற்றிருப்பதால் நடிகர் யோகி பாபு படக்குழுவினருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடித்த ‘மண்டேலா’ கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பும் மக்கள் மத்தியில் நிறைய பாராட்டுக்களைக் குவித்தது.

வெற்றிகரமான நகைச்சுவை நடிகர் – ஹீரோ என பயணித்துவரும் யோகி பாபுவுக்கு காலத்திற்கும் பெருமைப்படக்கூடிய படமாக அமைந்தது ‘மண்டேலா’. சமூக செயற்பாட்டாளர்கள் கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் பார்த்து பாராட்டினார்கள்.

இந்நிலையில், ‘ மண்டேலா’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சினிமாத்துறையினருக்கு வழங்கப்படும் உலகின் உயர்ந்த விருதான ஆஸ்கர் விருது, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

IMDb - IMDb

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பவுள்ள படத்திற்காக தற்போது இந்தியாவிலிருந்து 14 படங்கள் தேர்வாகியுள்ளன அதில் மண்டேலா திரைப்படமும் ஒன்று .

More in Cinema News

To Top