Connect with us

சென்னையில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் நடிகர் யோகிபாபு.. நடந்தது என்ன..?

Cinema News

சென்னையில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் நடிகர் யோகிபாபு.. நடந்தது என்ன..?

சென்னையில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

சென்னை மாநகராட்சி குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சென்னையில் குப்பைகளை சேகரித்து வரும் உர்பேசர் ஸ்மித் தனியார் நிறுவனம் சார்பில், குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் கொடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த குறும்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகிபாபு தூய்மைப் பணியாளராக நடித்துள்ளார்.

இந்த குறும்படத்திற்கான படப்பிடிப்பில் யோகி பாபு பங்கேற்று வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார். மேலும், தூய்மை பணியாளர்கள் போல சீருடை அணிந்து, 3 சக்கர வாகனத்தை ஓட்டிகொண்டு போய் பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வாங்கினார்.

இது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top