Connect with us

அருண் விஜய் யானை படத்தின் ott ரிலீஸ் தேதி வெளியானது…

Cinema News

அருண் விஜய் யானை படத்தின் ott ரிலீஸ் தேதி வெளியானது…

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அக்னிச் சிறகுகள், பார்டர், சினம் மற்றும் பாக்சர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன. முன்னதாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஹிட்டானது. யானை திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, யோகிபாபு, அம்மு அபிராமி மற்றும் விஜய் டிவி புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Yannai Movie First look released; Director Hari directs actor Arun Vijay |  இயக்குநர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் "யானை" திரைப்பட First  Look வெளியீடு | Movies News in Tamil

டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள யானை திரைபடத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவந்த யானை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, யானை படக்குழுவினர் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் யானை திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ZEE 5 OTT தளத்தில் ஒளிபரப்பாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top