ஸ்ருதிஹாசன் நடிப்பில் நேரடியாக OTT தளத்தில் ரிலீசாகும் புதிய படம்..!!

0
134

தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன். தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார் இவர். மேலும் ஆங்கில இணைய தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார்.

மேலும் ஸ்ருதி பாடிய Bhedi பாடல் வெளியாகியுள்ளது .இந்நிலையில் பிரபல நடிகர் விதியுத் அவர்களுடன் நடிகை ஸ்ருதி தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் ‘யாரா’.

இந்த படம் ஜூலை மாதம் 30ம் தேதி OTT தளத்தில் வெளியாகும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று திரையுலகில் கால்பதித்த 11ம் ஆண்டை கொண்டாடும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.