Connect with us

மேட்ச் டிரா, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் முடிவு என்னவாகும்?

Sports

மேட்ச் டிரா, மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டால் முடிவு என்னவாகும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில் மேட்ச் டிரா ஆனாலோ, மழையால் பாதிக்கப்பட்டாலோ என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நாளை தொடங்கவுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் இந்த போட்டி 11 ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பை எதையும் வெல்லாத நிலையில், இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் இந்திய அணி நல்ல ஃபார்மில் இருப்பதால் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசமாக இருப்பதாக வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்த போட்டி டிராவில் முடிந்தால் மீண்டும் போட்டி ஏதும் நடத்தப்படாது. கோப்பை மற்றும் பரிசு இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

ரிசர்வ் டே உண்டா?

ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே எனப்படும் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு நாளில் போட்டி நடத்தப்படும். ஐபிஎல் இறுதிப் போட்டி இவ்வாறு நடந்ததை உதாரணமாக கூறலாம். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்யை பொருத்தளவில் 5 நாட்கள் போட்டி நடைபெறும். இடையில் ஒரேயொரு நாள் மழையால் பாதிக்கப்பட்டால், 6 ஆவது நாள் மட்டும் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. 2021 இல் நடந்த ஃபைனலில் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தடைபட்டது. இதையடுத்து அடுத்த 5 நாட்களுக்கு போட்டி நடத்தி முடிக்கப்பட்டது.

மழை பெய்வதற்கான வாய்ப்புகள் எப்படி?

நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு அதாவது முதல் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. கடைசி நாளில் மதியத்திற்கு மேல் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் டே விதிகள் என்ன?

5 நாட்கள் மேட்ச் நடைபெறும். இடையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மீண்டும் போட்டி நடத்தப்படும்போது, 5 நாட்களுக்கும் முடிவு தெரிந்து விட்டால் அதுவை இறுதியாக அமையும். இல்லாவிட்டால் 6 ஆவது நாளான ரிசர்வ் டேயில் போட்டி நடத்தப்படும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி – ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்யா ரஹானே, கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்).

See also  "எதிர்நீச்சல் சீரியலில் இவர் தான் அடுத்த குணசேகரன்…வைரலாகும் Promo.."

ஆஸ்திரேலிய அணி – பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், மைக்கேல் நெசர், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், ஜோஷ் இங்கிலிஸ், டாட் மர்பி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Sports

To Top