Connect with us

படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்து..! பிரபல நடிகை கவலைக்கிடம்…

Cinema News

படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்து..! பிரபல நடிகை கவலைக்கிடம்…

‘சின்சியர்லி யுவர்ஸ்’, ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்’ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் 27 வயதாகும் ஷர்மீன் அகீ . வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் புதிதாக நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மிர்பூர் பகுதியில் மும்மரமாக நடைபெற்று வந்தது.

அப்போது அவர் அமர்ந்திருந்த மேக்கப் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீயை அனைத்து அவரை மீட்ட படக்குழு அவரை உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர் .

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகை ஷர்மீனுக்கு 35% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர் .

இதுமட்டுமல்லாமல் அவரது ரத்தத்தில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், படப்பிடிப்பு தளத்தில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top