Connect with us

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கப் பதக்கங்களை தட்டித்தூக்கிய 95 வயது இந்திய பாட்டி..!

Featured

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கப் பதக்கங்களை தட்டித்தூக்கிய 95 வயது இந்திய பாட்டி..!

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் பல துறைகளில் பலர் சாதித்துக்கொண்டு வருகின்றனர் . அந்தவகையில் விளையாட்டு துறைகளிலும் பல வீரர் வீராங்கனைகள் தங்களது திறமைகளை காட்டி சாதித்து வருகின்றனர் .

இந்நிலையில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் டோரூனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டோரன் நகரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடந்தது.

இந்தப் போட்டியில் பங்கேற்ற 95 வயதான இந்திய மூதாட்டி பவானி 60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்றவற்றில் பதக்கங்களை வென்று இந்த வயதிலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் .

பகவானி தேவி அவர்கள் அரியானா மாநிலம் கேடா கிராமத்தை சேர்ந்தவர். இந்த வயதிலும் அவர் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நாட்டிற்காக பெருமை சேர்த்த அவர் மேலும் பல சாதனைகளை படைத்து பல இளைய வீரர் வீராங்கனைகளுக்கு மும்மாதிரியாக அமைய பல தரப்பிலும் இருந்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  146 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்…

More in Featured

To Top