Connect with us

Witness நம்மை சரியான படி விட்னஸ் செய்யுமா???

Cinema News

Witness நம்மை சரியான படி விட்னஸ் செய்யுமா???

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “Witness” திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது இது கண்டிப்பாக நல்ல ஒரு படமாக அமையும் என சொல்லி வருகின்றனர்.

பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை பார்க்காத உண்மைகளையும், கண்ணுக்குப் தெரியாத வகையில் அங்கே செயல்படும் அதிகார விஷயங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, புதுமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார்.

தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட The People Media Factory இப்போது தமிழில் முக்கியமான ஒரு அழுத்தமான அதே சமயம் உணர்வுபூர்வமான திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் எண்டரி கொடுக்கிறது இந்த production ஹவுஸ்.

shardha ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா ஆகியோர் இணைந்து எழுதி உள்ளார்கள். பிலோமின் ராஜ் எடிட்டராகவும், ரமேஷ் இசையமைப்பாளராகவும் பாடலாசிரியர் கபிலன் பாடல்களை எழுதியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,வருகிற டிசம்பர் 9-ஆம் தேதி sony live ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.ரசிகர்களுக்கு செம சினிமா விருந்தாக இது இருக்கும் என சொல்லி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top