Connect with us

அடுத்து ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமா..? சூரரை போற்று இயக்குனர் விளக்கம்..!!

Cinema News

அடுத்து ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமா..? சூரரை போற்று இயக்குனர் விளக்கம்..!!

இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் சுதா கொங்கரா படமாக எடுக்க உள்ளதாக தகவல் பரவிய நிலையில், அது குறித்து சுதா கொங்கரா விளக்கம் அளித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற சூரரைப் போற்று படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார். டெக்கான் ஏர் என்ற நிறுவனத்தை தொடங்கிய கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது.

மேலும் இந்த படம் ஆறு தேசிய விருதுகளையும் வென்றது. இந்நிலையில், சூரரை போற்று படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்ததாக இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளார் என தகவல் பரவியது.

ஆனால், சுதா கொங்கரா அதை மறுத்துள்ளார். தான் ரத்தன் டாடாவின் மிக தீவிர ரசிகை என்றாலும், தற்போதைக்கு ரத்தன் டாட்டா வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் எண்ணம் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

அதே சமயம் தனது அடுத்த படம் குறித்து மிகவும் ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். சுதா கொங்கரா தற்போது இந்தியில் சூரரைப் போற்று படத்தின் ரீமேக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று இந்தி ரீமேக்கில், சூர்யா நடித்த கதாப்பாத்திரத்தில் அக்சய் குமார் நடித்து வருகிறார். இதற்கிடையே, இந்த படத்தை முடித்துக் கொண்டு, ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு சுதா கொங்கரா அடுத்த படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஹோம்பலே ஃபிலிம்ஸ் தான் கே.ஜி.எஃப். 1 மற்றும் 2, காந்தாரா போன்ற ஹிட் படங்களை தயாரித்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top