Bigboss Ultimate
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி கொடுக்கும் முக்கிய பிரபலம்..! வெளியான செம தகவல்…
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது 26வது நாளை வெற்றிகரமாக தொட்டு இருக்கிறது. இதில் வனிதா திடீரென நேற்று வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மறுபக்கம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு பதில் இந்த வாரம் முதல் சிம்பு தொகுப்பாளராக வர போகிறார் என்பதும் அளவற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்நிலையில் தற்போது இந்த வார இறுதியில் ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வேற யாரும் இல்லை மக்களே நம்ப விஜய் டிவி KPY புகழ் காமெடி மன்னன் சதீஷ் தான்.
இந்நிகழ்ச்சியில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் முந்தைய சீசன்களில் இருந்து வந்தவர்கள் என்ற நிலையில் இவர் மட்டும் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
