Connect with us

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் : நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து சொந்த மண்ணில் கெத்து காட்டிய இந்திய அணி..!

Featured

எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் : நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து சொந்த மண்ணில் கெத்து காட்டிய இந்திய அணி..!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தீவிரமாக விளையாடி வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி கடை வரை போராடி திரில் வெற்றி பெற்றது .

இதையடுத்து கடந்த 21ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது . இப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் மற்றும் , சுப்மன் கில் முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட தொடங்கினர் . நியூசிலாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் இருவரும் பறக்க விட்டு ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்தனர் . இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா, ஏறத்தால மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். இது ரோகித்துக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 30வது சதமாக அமைந்தது. இதையடுத்து சுப்மன் கில்லும் அவர் பங்கிற்கு சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் ரோகித் 101 ரன்னிலும், கில் 112 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கோலி 26 ரன், இஷன் கிஷன் 17 ரன், சூர்யகுமார் யாதவ் 14 ரன் வாஷிங்டன் சுந்தர் 9 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது சற்று ஏமாற்றத்தை கொடுத்தது .

இறுதி கட்டத்தில் சிறிது நேரம் அதிரடி காட்டிய பாண்ட்யா 37 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது. இதையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களத்தில் விளையாடியது .

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான பின் ஆலன் டக் அவுட்டாகி வெளியேற . மற்றொரு துவக்க ஆட்டக்காரர் டெவன் கான்வே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக நியூசிலாந்தின் பக்கம் சென்ற நிலையில் , இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சர்குல் தாகூர் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் இழுத்து வந்தார் .

See also  நடிகை மகேஸ்வரியின் பிகினி போட்டோஷூட் வைரல்!

டெவன் கான்வே 138 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்து வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் திருப்பி சென்றனர் . 41.2 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணியை வைட் வாஷ் செய்தது. சொந்த மண்ணில் கெத்து காட்டிய இந்திய அணி ஒருநாள் போட்டி அணிகள் தர வரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top