Connect with us

உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நிச்சயம் விளையாட மாட்டோம்..! மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்..

Featured

உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நிச்சயம் விளையாட மாட்டோம்..! மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான்..

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல தரமான அணிகள் பங்கேற்கும் 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி எதிர் வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 சிறப்பான தரமான அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

ஆனால் சில பல காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாட முடியாது என அறிவித்தது . இதனால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்தது . இந்த செய்தியை கேட்ட இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ஆசிய கோப்பைக்காக பிசிசிஐ இந்தியஅணியை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என்றால், உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்தியாவுக்குச் பாகிஸ்தான் அணி செல்ல வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இதுமட்டுமல்லாமல் உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் போட்டியை மட்டும் இலங்கை அல்லது வங்காளதேசத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திடீரென பாகிஸ்தான் கொடுத்த இந்த மறைமுக மிரட்டலால் என்ன செய்வதென்று தெரியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது . மேலும் இந்த பிரச்னை குறித்து பல ஆலோசனைகளும் எதிர் வரும் நாட்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வீரன் படத்தின் Twitter Review படம் எப்படி இருக்கு!!

More in Featured

To Top