நடிகர் விஷ்ணு விஷாலுக்கு விரைவில் டும் டும் டும்…வெளியான திருமண தேதி

0
23

நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . ‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்ச்சசன்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக விஷ்ணு பிரபலமான நடிகராக வலம் வருகிறார். கடைசியாக அவர் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கருத்து வேறுபாடுகள் காரணமாக விஷ்ணு விஷால் கடந்த 2018ம் ஆண்டில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதையடுத்து பிரபல பூப்பந்து வீரர் ஜ்வாலா குட்டாவை அவர் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. விஷ்ணு விஷால் மற்றும் ஜ்வாலா குட்டா இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது.

Jwala Gutta & Vishnu Vishal to have a registered marriage | Tamil Movie  News - Times of India

இப்போது இவர்கள் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது, ​​அவர்கள் அனைவரும் தங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் 2021 ஏப்ரல் 22 அன்று திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.மேலும் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த ஜோடிக்கு சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.