Connect with us

விஷால் பச்சை குத்தி உள்ள நடிகரின் புகைப்படம் பார்த்து பலர் பாராட்டி உள்ளனர்..!

Cinema News

விஷால் பச்சை குத்தி உள்ள நடிகரின் புகைப்படம் பார்த்து பலர் பாராட்டி உள்ளனர்..!

தமிழில் செல்லமே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷால்.பின்னர் இவர், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி,சிலப்பதிகாரம்,கதகளி,இரும்புத்திரை ஆகிய வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகரானார்..

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வீரமே வாகை சூடும், லத்தி திரைப்படங்கள்சுமாராகத்தான் ஓடியது..அதிலும் பெரிய ஹிட் இல்லை என வருத்தத்தில் உள்ளார் நடிகர் விஷால்..

புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கிய லத்தி படத்தை விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தனர்.

இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரித்தது.சொல்லிக்கொள்ளும் அளவு வசூலும் பெறவில்லை என்பதே நடந்தது..

லத்தி படத்தினை அடுத்து ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் S.J. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஷால்,தன்னுடைய நெஞ்சில் மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் முகத்தை பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு புரட்சி தலைவரை நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும்புரட்சி தளபதி என பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.நிறைய உழைக்கிறார் வெற்றி கிடைக்கிதான்னு பாப்போம்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top